
▪️
@ss_twtz
Followers
1K
Following
443
Media
161
Statuses
2K
பேரன்பின் முதல் அத்தியாயம் ஏற்றுக்கொள்வது இறுதி அத்தியாயமும் அது தான்.
2
44
145
ஒரு பைத்தியக்காரனை அணுகுவதைப்போலவே என்னிடம் உறவாடுங்கள் அளவாக உண்மை பேசுங்கள் சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிடுங்கள் சில காலம் கழித்து எதுவுமே தெரியாததை போல வந்து மீண்டும் பேசுங்கள் அவ்வளவையும் ஏற்கிறேன் காரணம் நீங்களும் என்னைப்போலத்தான்.
0
5
23
கற்பனைகளில் உனை கொஞ்சுகிறேன் காதல் முத்தம் ஆயிரம் தருகிறேன் உன் மடிமீது மழை செய்கிறேன் ஒரு மலர் போல உன் இதம் உணர்கிறேன் நிழல்கள் வரைந்த ஓவியத்தை படம் பிடிக்கிறேன் நிஜத்தில் எங்கிருக்கிறேன் ஓர் எல்லையில் தவித்திருக்கிறேன் முக்கால் காலில் தவமிருக்கிறேன்.
0
1
8
சுற்றி எந்த போர்களோ ரத்தமோ காயமோ இல்லை இன்னும் சொல்லப்போனால் மழை மேகங்கள் பூமியை கொஞ்சுகின்றன இருந்தும் ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது மனது ஒரு தேநீர் மிடறு விழுங்க ஏன் இவ்வளவு சிந்தனைகள் புரிதல் இல்லையா புரிதல் கொள்ளையா புரிதல் சுமையா புரிதல் அறியாமையா.
0
0
6
மேம்பால நிழலில் உள்ள குளுமை போதுமென்று வாழும் ஏழையைப் போல ஏதாவது ஒரு வடிவத்தில் ஓர் அன்பின் நிழலில் ஓய்ந்துகொள்கிறது மனம் தலையில் விழுமோ என்ற பயம் இருந்தாலும் இருப்பது தானே இப்போதைக்கு இதம்.
0
0
6
விவரிக்க முடியாத நிலைகளிலும் உனக்கான நிமிடங்களை வைத்திருக்கிறேன் உன் நலம் நலமா என்று யோசிக்கிறேன் உனக்கு பிடிக்கும் என்று ஒரு பாடலை தேடுகிறேன் என்னுள் உன் வேர்கள் வாழ்கின்றன என்பதை என்னால் நிருபிக்க முடியாது நினைவுகளை கடத்த முடியாது.
0
1
7
மண்ணுக்குள் வாழும் வேர்களை நினைத்துக்கொண்டன நெகிழி பைகளில் மூச்சடைத்து வைக்கப்பட்டுள்ள அரளிப்பூக்கள்.
0
2
15
வேப்பமர நிழல் தித்திக்கும் பலாமர நிழலும் தித்திக்கும் கசப்பை உணர நிஜத்தை ரசிக்க வேண்டும் நிஜம் நிஜத்தில் கசக்கும்.
0
1
8
எது நிஜம் என்பது கூறப்பட்ட பொய்களின் தரம் சார்ந்தது உண்மை ஒரு பிசாசு அது கட்டிலுக்கடியிலேயே தான் கிடக்கிறது.
0
2
13