
Life is short but Art is long
@chandrasek84564
Followers
1K
Following
16K
Media
352
Statuses
10K
Joined October 2024
காற்றுக்கோ தலைக்கனம், என்னைத் தழுவியதால் அது வீசுது நறுமணம்.. வண்டுக்கோ பெருமிதம், என்னமுதைப் பருகியதால் அதனாண்மைக்கு தலைகனம். பூவுக்குள் எழுந்தது பூகம்பம், ஒரு பொழுதுக்குள் எனை அழைத்தது துர்மரணம்..
7
2
32
என் ஜென்மம் யாவும் ஈசனடி சேறும். மறுஜென்மம் யாவும் அவனை மகிழ்விக்கத் தோனும். செல்லுமிடமெல்லாம் சிவன் பெயரைச் சொல்லும். பேசும் மொழியெல்லாம் அவன் வழியைத் தொடரும். ஓம் நமச்சிவாயம் என்பேன் அபய குரலைக் கேட்பான். ஜதிசொல்லித் துதிப்பேன் நற்கதியை அருள்வான்.
6
4
6
உன் சிரித்த இதழில் பாய்வது செந்தேனே. அதை ரசித்து சுவைப்பதில் நான் பொன்மானே. நூலறுந்த பட்டம் யான் காதலில் மிதக்கின்றேன். கடைக்கண் திறந்தால் போதும் உன் காலடியில் கிடப்பேனே. மோகத்தை விதைத்தவளே என்காமத்தீயில் எரிவாயோ வெள்ளி முளைத்தாலும் உனையள்ளியணைப்பேனே.
1
2
2
உன் பார்வைப் புதிதா அதன் அர்த்தம் இனிதா.. சுவைக்கனி தரும் நீ மரமா.? உனைப் படைத்தவன் பிரம்மா! தொடத் தொட சூடேறும் நரம்புகள் புடைப்பேறும்.. கரும்பினில் சாரூறும் எறும்பும் பசியாறும்.. கனித் தரும் மரமே நீயெனக்கு வரமே. மணந்திடும் பூச்சரமே அணைத்திடும் என் கரமே.
1
1
6
பாடும் பறவை எனக்கு ஆ��ுதல் தருமே.. நா��்கள் சேர்ந்து மகிழ வாழ்த்துகள் கூறுமே.. இணைந்த உள்ளம் விளக்கம் தருமே... தூக்கம் தொலைக்க அது மருந்து தருமே.. விடியல் வெள்ளி சுணக்கம் கொள்ளுமே.. நாம் வணக்கம் கூற புன்னகைப் பூக்கும்..
2
1
7
வாழ்வு கொடுத்த தெய்வம், என்னழகைப் பார்க்கவில்லை. அது கேட்டு வாங்கவில்லை எனக்கு கொடுக்க ஏதுமில்லை. அன்று துன்பம் வந்த வேளை எனையவன் கைவிடவில்லை. அவன் நாடி பிடிக்கவில்லை மனதில் இடம் பிடித்துவிட்டான். உடலையவனுக்குத் தந்தேன் மழலை எனக்குத் தந்தான்..
0
0
4
அந்த காலம் எனக்கு பதில் சொல்லுமே அந்த நாளும் எனக்கு துணை நில்லுமே.. ஆசை உனை அள்ளுமே இளமை எனைக் கிள்ளுமே. தனிமை நம்மை வெல்லுமே புதுமை வாழ்த்து சொல்லுமே.. வாழும் காலம் கொஞ்சமே வாழ்கை நம்மை கொஞ்சுமே.. இனி மனம் துஞ்சுமோ காதல் வேண்டிக் கெஞ்சுமே..
2
0
4
ஓடம் அது ஓடும் நதியின் ஓட்டம் கண்டு.. உன்னில் மனம் மேயும் உன் அன்பின் ஆழம் கண்டு.. நீயோ மல்லிகைப் பூச்செண்டு உனை முகரும் நானோ வண்டு.. உனை நாடிய நோக்கங்கண்டு தேனமுதை தந்தாய் இன்று.. சொர்க்கம் இதுவே என்று வாழ்வோம் நிஜத்தை கண்டு..
1
1
8
கண்ணுக்கினிய சிலையே வா... பொண்ணுக்குப் புகழ் சேர்ப்பாய் வா.. என்னுயிரை ஏற்பாய் நீ வா.. உன் கருவறையில் அதை வளர்ப்பாய் வா.. தாலாட்டும் தாயாய் வா தமிழ்தாய்க்கு மகளாய் வா.. நான் தேடும் மானாய் வா அந்தமானுக்கு போவோம் வா..
2
1
9
விழியால் மொழியும் உறவே உனைக் களவாட வருவேன்.. சிலையாக நீ நின்றாலும் கலையாக நான் ரசிப்பேன்.. பிழையாக நீ நினைத்தாலும் விலையாக எதையும் தருவேன்.. தொலைவாக நீ இருந்தாலும் காற்றாகப் பறந்து வருவேன்.. வாடாமல்லி உனை நினைத்து மனம் வாடித்தான் போகிறேன்..
2
2
9
எங்கெங்கு நீ சென்றாலும் நிழலாக தொடருமே என்னுள்ளம்.. மண்ணுலகம் உனை வெறுத்தாலும், என்னுலகம் வாழவைக்கும்.. நீ தானே பொன்னுலகம் உன் மடியே என்னுலகம் படைப்போமே தனியுலகம்.. குளமெங்கும் தாமரைப்பூ உன் முகத்திலே பூரிப்பூ என் நாவில் நீயோ தித்திப்பு..
0
1
9
உன் அன்புக்கு நான் அடைக்கலமே.. உன் பண்புக்கு நான் உறைவிடமே.. சொக்கத்தங்கம் -- நிறம் திருடியது உன்னிடமே.. உன்னை உரசி பார்க்குது என் தவமே.. விடியாத பொழுதுக்கு ஏங்குது என் மனமே.. தடையில்லாக் காதலுக்கு�� உன்மனம் இடந்தருமோ..
0
0
3
அன்பே உன்மீது என்மனம் காதல் கொண்டது. உன்னைக் கட்டியணைக்க என்மனம் வீரம் கொண்டது. பூவாக உன்னை என்கரங்கள் ஏந்திக் கொண்டது. நாளும் உன்மணத்தை முகர என்மனம் ஆசைக்கொண்டது. அன்பே உன்னால் கட்டிலுக்கு வேலை வந்தது.. நம்மைத் தாங்கிக்கொள்ள அதற்கோ யோகம் பிறந்தது..
1
0
4
வானவெளி வீதியிலே வட்டநிலா நீ போகக்கண்டேன்.. மோகத்தை தூதுவிட்டு, தாகத்தை தீர்த்துக் கொண்டாய். வெண்ணிலா நீ போகும் பாதையிலே கண்ணிலா என் காதல் முகம் வாடுமோ.. பொன்னில்லாத ஊரிலே தங்கமகள் நீ பிறந்துவிட்டாய்.. தண்ணியில்லாத பூமியிலே மேகமழை பொழிய வந்தாய்..
0
0
3
விடியாத என் பொழுதினில் விளக்கேற்ற வா.. கலையாத என் கனவினை அலங்கரிக்க வா.. வளமான என் நினைவினில் அரங்கேற வா.. பிழையான என் பழக்கத்தை வேரறுக்க வா.. சுகமான நம் வாழ்வுக்கு படிதாண்டி வா... சொகுசான வாழ்க்கையை அனுபவிக்க வா..
0
0
3
மையிட்ட உன் கண்ணிமைகள் மெய் பேசும். பொய்யுரைக்கும் என் கவியோ பொய் பேசும். உன்னிதழோடு என்னிதழ்கள் ஒட்டி உறவாடும். என் கனவோடு உன் வண்ணம் கதைப்பேசும். கண் திறக்க மனமில்லை உன் வண்ணம் நிறமிழக்கும்.
0
0
3
இமையால் உன்னை தழுவிய போது, பேரின்பம் எனக்கு வழிமொழிந்ததே.. மொழியால் உன்னை வர்ணித்த போது, தமிழ்தாய் என்னை அரவணைத்ததே.. சிலையாக உன்னை செதுக்கிய போது, கலையெனக்கு கைகொடுத்ததே.. உன்னன்பு என்னை ஆதரித்தபோது, சொர்க்கத்தின் கதவுகள் எனக்கு வழிவிட்டதே..
0
0
4
0
2
7
அழகே உன்னை ஆராதிக்கிறேன்.. கொஞ்சம் பழகே உனக்குள் குடியேறுகிறேன்.. விழியால் என்னை முழுங்குகிறாய்.. கனிமொழியால் என்னைப் பாராட்டுகிறாய்.. உன்னாடை தமிழ் பண்பைப் பறைசாட்டுது.. உன் புன்முறுவலோ எனக்கு இனிப்பூட்டுது.. Good afternoon friends 🌹 🌹
0
1
8
பஞ்சனைக் காத்திருக்க பைங்கிளி வெட்கப்பட, அமுதூட்டும் ஆண்மைக்கு இன்று தான் முதலிரவு.. கண்ணிமை மூடியிருக்க ஆண்மையங்கு அரங்கேற, அதிசயிக்கும் பெண்மைக்கு இன்று தான் முதலிரவு.. வானில் வட்ட நிலா பால் காய்ச்ச, இணையும் ஈருடலுக்கு இன்று தான் முதலிரவு..
0
0
2
வானத்து நிலவு இன்று, பூமியில் இறங்கி வந்ததோ..? அது தேடுது என்னை என்மீது மோகம் கொண்டதோ..! அதிர்ஷ்ட காற்று என்மீது கருணைக் கொண்டதோ..? எங்களை சேர்த்துவைக்க பிரியம் கொண்டதோ..! வாழும் வரை வாழ்ந்து பார்ப்போம்.. காலன் அழைக்கும் வரை இன்பம் துய்ப்போம்..🫂
0
0
2