Nanjil Sampath
@NanjilPSampath
Followers
49K
Following
317
Media
140
Statuses
880
பரப்புரைச் செயலாளர்-தமிழக வெற்றிக் கழகம், DRAVIDIAN, இலக்கியவாதி ,Tamil literati
chennai
Joined February 2018
நாவை வாளாய் சுழற்றும் நாஞ்சில் மண் தந்த நற்றமிழ் பேச்சாளர், அன்பு அண்ணன் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களை தமிழக வெற்றிக் கழகத்துக்கு வருக வருக என வரவேற்கிறோம்.🙏🏾 @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand | @NanjilPSampath #தமிழகவெற்றிக்கழகம் | #TVK
42
748
3K
சனாதனக் கிடங்கிலிருந்தும், வைதீகப் பள்ளத்தாக்கிலிருந்தும் மக்களை மீட்க வியூகம் வகுத்த மாமேதை; அரசியல் சட்டத்தை ஆக்கித்தந்த நிகரற்ற மாமனிதரின் நினைவு நாளில் அவரை வணங்குவோம்..! #ambedkarjayanti
19
374
2K
தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி @TVKVijayHQ முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே! @AadhavArjuna @BussyAnand
889
4K
18K
மதச்சார்பின்மைக்கு தன்னுடைய தீர்ப்பின் மூலம் குழிதோண்ட முயற்சிக்கும் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் IMPEACHMENT கொண்டுவர தமிழக எம்.பி.கள் முன்வர வேண்டும். அவசியம்.. அவசரம்!
44
177
787
எளியவன் எனது சுமைகளைப் பகிர்ந்துக் கொள்கிற என் உரிமையுள்ள தம்பி புதுவயல் சுப்பிரமணியனின் தந்தை வெள்ளைச்சாமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து கண்ணீர் வடிக்கிறேன். என் தம்பிக்கும், அவன் தாய்க்கும் , அவரை பரிபாலித்து பாதுகாத்த தங்கை ராதிகாவுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
3
4
54
காலில் நகம் முளைத்த நாள் முதலாக காலத்தீயில் கருகிப் போகாத தந்தைப் பெரியாரின் தன்மானக் கொள்கைகளை வென்றெடுக்க வினைத் திட்பத்துடன் விழி மூடாமல் இயங்கும் @AsiriyarKV யின் பிறந்தநாளுக்கு பல்லாண்டு பாடுகிறேன்!எனது வாழ்நாளையும் பெற்று @AsiriyarKV வாழ வேண்டும் என்று காலமகளை யாசிக்கிறேன்!
18
22
138
தமிழுக்கு 147 கோடி; சமஸ்கிருதத்திற்கு 2532 கோடி ஒதுக்கியவர்கள் இப்போது காசி தமிழ் சங்கமத்திற்கு வாருங்கள், தமிழைக் கற்றுக் கொள்ள வாருங்கள் என்று அழைக்கின்றார்கள்..! இந்த மோசடியை எந்தக் கோவிலில் முறையிடுவதென்றுத் தெரியவில்லை..
9
13
96
இன்று மாவீரர் நாள்..! தமிழ் ஈழ தாயகத்திற்காக இன்னுயிர் தந்த தியாகிகளை வணங்குகிறேன்.. தமிழர்களின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்தான்..இன்று இல்லாவிட்டால் நாளை.. நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள்..
3
5
82
இன்று பிறந்தநாள் காணும் நாளைய முதல்வர் த��்பி @Udhaystalin க்கு பல்லாண்டு பாடுகிறேன்..!
65
162
1K
கோட்டைக்கு போக வேண்டும் என்று திட்டமிட்டு மூத்தவர்களையும் காத்தவர்களைய��ம் கட்சியைவிட்டு வெளியேற்றிய எடப்பாடிக்கு போகிற போக்கை பார்த்தால் கோவணம் கூட மிஞ்சாது போல் தெரிகிறது..! @EPSTamilNadu @AIADMKOfficial
60
263
1K
ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண்மணியின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என அலக்கழித்திருக்கிறது சீனா.! ஜோஹனஸ்பர்க்கில் உலகத் தலைவர்களிடம் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிற பிரதமருக்கு இது தெரியுமா?
4
18
70
காலமாகாத கவிதைகளை காலம் காலமாய் தந்து கொண்டிருந்த , பாவேந்தர் பரம்பரையில் மூத்த கவிஞர் தமிழகத்தின் ஃபாப்ளோ நெருடோ ஈரோடு தமிழன்பன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், மானக் கவிஞர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்கிறேன்..
3
4
28
பாரபட்சமே உன் பெயர்தான் பா.ஜ.க.வா? மதுரை, கோவையை விட மக்கள் தொகைக் குறைந்த ஆக்ரா, பாட்னா, போபால், நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோவை கொடுத்த @narendramodi அரசு, தமிழ்நாட்டை திட்டமிட்டு வஞ்சிப்பது ஏன்? இந்த கேள்விக்கு 2026யில் பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்..
4
10
67
விடுதலைக்காக செக்கிழுத்து விடுதலையை வென்றெடுப்பதற்கு ஈரக்கடலில் கப்பலோட்டி இரண்டு ஆயுள் தண்டனை பெற்று மண்ணைக் காக்க போராடி மண்ணென்னை வியாபாரம் செய்து வாழ்ந்த வ.உ.சி-யின் நினைவு நாளில் நெஞ்சம் கனக்கின்றது,யார் செய்தார் இந்த தியாகத்தை தமிழனை தவிற?வள்ளல் வ.உ.சி.யை வணங்குகிறேன்.!
3
8
57
மும்பைத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவரா��் பாட்டீல் ராஜினாமா செய்ததைப் போல, தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் @AmitShah பதவி விலகுவதுதான் அரசியல் அறம்! #delhiblast
15
20
88
2014யிலிருந்து இதுவரை 33 தீவிரவாத தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்த இரத்த அத்தியாயத்தைக் கண்டறிய வேண்டிய உளவுத்துறை உள்ளீடற்றுப்போய்விட்டது. உள்துறை உருக்குலைந்துவிட்டது. இந்த நாசம் தொடருமானால் நாடு என்னாகும்?
3
9
45
தேர்தல் ஆணையத்திற்கும், ஒவைசிக்கும் , பிரசாந்த் கிஷோருக்கும் கிடைத்த வெற்றி இது. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் சீரமைக்க மக்கள் சக்தியயை திரட்டுவதற்கு பிகார் தேர்தல் முடிவுகள் மக்களை எச்சரிக்கிறது. #BiharElection2025
9
18
93
உண்பது நாளி; உடுப்பவை இரண்டே..! இதுதான் நான் வாழ்க்கையில் பின்பற்றுவது, அதிகாரத்தை அண்டிப்பிழைக்க வேண்டும் என்று கருதியதில்லை;அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை நான் மதிப்பதும் இல்லை.! கொள்கையை நேசிக்கிறேன், அதனால் நிம்மதியாக இருக்கிறேன்..!
14
27
199
ஆகாயத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்படுவதும் இல்லை; அதலபாதாளத்தைப் பார்த்து நான் அஞ்சுவதும் இல்லை..! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..!
8
11
128