MSivaRajan7 Profile Banner
M.SivaRajan Profile
M.SivaRajan

@MSivaRajan7

Followers
11K
Following
359K
Media
9K
Statuses
47K

| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்

Joined August 2021
Don't wanna be here? Send us removal request.
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
#பெரும்பேர்_கண்டிகை #பெரும்பேர்_கண்டிகை_முருகன் #பெரும்பேர்_கண்டிகை_முருகன்_திருக்கோவில் #பெரும்பேர்_கண்டிகை_முருகன்_திருக்கோயில் #பெரும்பேர்_கண்டிகை_முருகன் #பெரும்பேர்_கண்டிகை_குமரன் #பெரும்பேர்_கண்டிகை_கந்தன் #கௌமாரம் #முருகன்வழிபாடு #ஓம்நமோகுமாராயநம
0
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
#செல்லும்_வழி : சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கத்திற்கு பிறகு 5 கிலோ மீட்டர் தொலைவில் இடது புறம் திரும்பி இரண்டு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
#நேர்த்திக்கடன் : இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தும், யாகங்கள் செய்தும் நேர்த்திக்கடன் செய்கிறார்கள் பக்தர்கள். #தரிசன_நேரம் : காலை 07 மணி முதல் 12 மணி வரை மாலை 04 மணி முதல் 07 மணி வரை
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
#திருவிழா : சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் பிரம்மோற்சவம், ஆடி கிருத்திகை, மஹா கந்த சஷ்டி, த தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம். #பிராத்தனை : எதிரிகள் தொல்லை, கடன் பிரச்னை, நோய் நொடி நிவர்த்தி, ஜாதக தோஷங்கள் ஆகியவை நீங்க இங்கு பிராத்தனை செய்கிறார்கள் பக்தர்கள்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
பின்னர் அங்கே எழுந்தருளும் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரரை வழிபட்டு, பெரும்பேர் கண்டிகையில் தவமிருக்கும் அகத்தியருக்குத் தரிசனம் கொடுக்க அழைத்து வருவார். இந்த வைபவம் இங்கே கோலாகலமாக நடைபெறும்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
#அகத்தியருக்கு_தரிசனம் : சித்ரா பௌர்ணமியன்று பெரும்பேர் கண்டிகையில் இருந்து புறப்படும் முருகப்பெருமான், மகாமேரு மலையும் சஞ்சீவி மலையும் சந்திக்கும் பகுதியான இரட்டை மலைச் சந்திப்புக்கு எழுந்தருளுவார்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
வீர ராஜேந்திரன் கல்வெட்டு சோழர் காலக் கல்வெட்டு : வீர ராஜேந்திர சோழன் காலத்தைய கல்வெட்டில் ‘பெரும்பேறூரான திரிபுவன நல்லூர்’ என்றிருக்கிறது. இந்த ஊர் கயிலாசநாதர் கோயிலில் காணப்படும் 16 – ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் ‘பெரும்பேறு பாளையம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
இந்த ஊர் இப்போது ‘பெரும்பேர் கண்டிகை’ என்று அழைக்கப்பட்டாலும் அருகிலிருக்கும் தான்தோன்றீசுவரர் கோயில் கல்வெட்டுகளில் ‘பெரும்பேறூர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
கோயிலுக்கு அருகிலேயே உள்ள வில்வமரத்தின் அடியில் சட்டநாத சித்தரின் ஜீவ சமாதி அமைந் திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது மிகவும் விசேஷம் என்கிறார்கள். இதனால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறுமாம்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
வேறு எங்கும் இல்லாத வகையில், இங்கு மட்டும் வேலாயுதத்துக்குச் சிறப்பு வழிபாடாக ‘25 மூல மந்திர பீஜாக்ஷர அர்ச்சனை’ செய்யப்படுகிறது. கருவறை விமானத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
இவற்றைச் செய்யும் போது யம பயம் நீங்கும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், கல்வி ஞானம் பெருகும், சித்த சுவாதீனம் தெளிவடையும், சத்ருக்களின் தொல்லைகள் விலகும்” என்றார். இங்கே சக்தி வேல் ஒன்றும் பிரதிஷ்டை ஆகியுள்ளது. இதற்கும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
ஆறு பகுதிகளால் ஆன சக்தி வாய்ந்த யந்திரம் இது. அகத்தியருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த காலத்திலிருந்தே இந்த யந்திரம் வழிபடப்பட்டு வருகிறது என்கிறார்கள். சத்ரு சம்ஹார அர்ச்சனை, ஹோமம் ஆகியனவும் செய்து பலரும் வேண்டிக் கொள்கிறார்கள்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
#சத்ரு_சம்ஹார_யந்திரம் : முருகப்பெருமானின் திருவுருவத்துக்கு முன்பாக சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இங்கே வந்து நின்று வேண்டிக் கொண்டால் பகை அழியும் என்கிறார்கள். வசியம், ஆகர்ஷணம், உச்சாடனம், மாரணம், மோகனம், தம்பணம் என்று,
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
முருகப்பெருமானின் கருவறைக்கு அருகில் காசி விசுவநாதரும் விசாலாட்சி அம்பிகையும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
திருக்கோயில் திருச்சுற்றில் தென் மேற்கில் செல்வ சுந்தர விநாயகரும், வட மேற்கில் சுந்தர விநாயகரும் அருள்புரிகிறார்கள். கருவறைக்குள் செல்லும் போது அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
போர்க்கோலத்தில் காட்சியளிக்கிறார். போர்க்கோலம் என்றாலும் முருகனின் திருமுகங்களில் அறக்கருணையே தென்படுகிறது. தேவியர் இருவருடன் தெற்கு நோக்கி கந்தக் கடவுள் காட்சி தருவது மிகவும் விசேஷம் என்று சொல்கிறார்கள் பக்தர்கள்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
கருவறையில், புன்னகை தவழ ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டவராய், வள்ளி - தேவசேனாவுடன் அற்புத தரிசனம் காட்டுகிறார் சிவ சுப்ரமணியர். திருக்கரங்களில் வஜ்ரம், அம்பு, வாள், கொடி, கதை, வாள், வில், கேடயம், தாமரை மலர், திரிசூலம் ஆகியவற்றுடன் அபய - வரத அஸ்தம் திகழ,
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
இந்த மலைக்கு சஞ்சீவி மலை என்றே பெயராம். எனவே கோயிலை அடைய நாம் 100 படிகளில் ஏறிவரும் வேளையில் சுவாசிக்கும் மூலிகைக்காற்று நம் நோய்களை நீக்கி நம்மை வலிமைப்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். முருகக் கடவுள் இங்கே ஞானகுருவாக தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார்.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
அவர் ஆவலைப் பூர்த்தி செய்ய சிவ சுப்பிரமண்யராக இறைவன் காட்சி கொடுத்தார் என்கிறது தல புராணம். சிறிய மலைக்குன்று. மலை முழுவதும் மூலிகைகள். அற்புதமாக வீசும் காற்று, களைப்பை நீக்கும் சூழல் என பெரும்பேர் கண்டிகை மிகவும் அற்புத பூமியாகத் திகழ்கிறது.
1
1
2
@MSivaRajan7
M.SivaRajan
9 hours
#ஸ்தல_வரலாறு : சிவபெருமானின் திருமணக்கோலத்தை விரும்பியபோதெல்லாம் பெறும் வரத்தை அகத்தியர் பெற்றவர். அவர் இத்தலத்துக்கு வந்த போது சிவபெருமானின் திருமணக் கோலத்துடன் முருகப்பெருமானையும் தரிசிக்கும் பேராவல் பெற்றார்.
1
1
2