arivalayam Profile Banner
DMK Profile
DMK

@arivalayam

Followers
953K
Following
15
Statuses
62K

DMK | Dravida Munnetra Kazhagam https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFx

Tamil Nadu
Joined March 2011
Don't wanna be here? Send us removal request.
@arivalayam
DMK
23 hours
கல்வியைப் புறந்தள்ளிவிட்டு, காவியைப் புகுத்தும் பாசிச பாஜக அரசிற்கு வன்மையான கண்டனங்கள்! - மாணவர் அணிச் செயலாளர் திரு @EzhilarasanCvmp அவர்கள் அறிக்கை! சமத்துவம், சமதர்மம், சமூகநீதி, மதச்சார்பின்மையை உள்ளடக்கிய திராவிட பண்பாட்டிற்கு நேர் எதிரானது ஆரியப் பண்பாடு. இதை பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் மொழியியல் வல்லுனர்களும் நிறுவியுள்ளனர். அதுபோலத் தான் தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு நேர் எதிரானது ஒன்றிய பாஜக அரசு முன்வைக்கும் காசியின் ஒற்றை கலாச்சாரம். இப்படியிருக்க “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற பெயரில் 'காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம்' என்ற முழக்கத்துடன் கடந்த 2022 ஆண்டு முதல் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாசிச பா.ஜ.க அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் கரு பொருளாக ‘அகத்திய முனி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று சென்னையில் அகத்திய முனிவர் நடைப்பயணம் என்ற பெயரில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிற்கும் மதவெறி அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி, மக்களின் ஒற்றுமையை சிதைத்து வரும் பாஜக தற்போது எதிர்கால தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மதவெறி நஞ்சினை விதைக்கத் தொடங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய (இந்து) கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம்; தேசிய உணர்வை வளர்கிறோம் என்ற பெயரில் தங்களின் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை மாணவர்களிடம் பரப்பி அவர்களின் அறிவியல், பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. மும்முமொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முனைவது, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் மனுதர்ம சாஸ்திரத்தை விவரிக்கும் கருத்துப்படங்களும், அறிவியலுக்கு மாறான புராண இதிகாச கருத்துகளை உள்ளடக்கிய பாடங்களை திணிப்பது, உயர் கல்விக்கான நிதியை குறைப்பது-தடுப்பது, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வந்து மாணவர்கள் பள்ளி படிப்பை நிறைவு செய்ய முடியாத வகையில் இடைநிற்றலை உருவாக்கி அனைவருக்கும் கல்வி வழங்கும் வாய்ப்பை சிதைப்பது என அனைத்திற்கும் ஊற்றாக விளங்கும் சமூகநீதி, சமத்துவம், சம வாய்ப்புக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை 2020யை நடைமுறைபடுத்த மாநிலங்களை அப்பட்டமாக அச்சுறுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பள்ளிக் கல்வித் திட்டத்திற்கான நிதி ரூ.2,152 கோடியை பறித்து, வேறு மாநிலங்களுக்கு அளித்திருப்பது இதுவரை இந்திய வரலாற்றில் எந்த ஒன்றிய அரசும் மாநிலங்களை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக கல்விக்கு தடை ஏற்படுத்தும் அளவிற்கு இரக்கமில்லாமல் நடந்துக் கொள்ளவில்லை என கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். பல்வேறு மாணவர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது 'காசி தமிழ்ச் சங்கமம்' என்ற பெயரில் ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்களிடையே சாதிய, மதவாத உணர்வுகளை விதைக்கும் வஞ்சக செயலில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டிப் போட்டுக்கொண்டு முன்னேறி வரும் நிலையில், இங்கு��்ள ஒன்றிய பாஜக அரசு கல்வியில் மதத்தைத் திணிக்கும் பிற்போக்குத் தனத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. இதை தந்தை பெரியார் அவர்கள் 1931 ஆம் ஆண்டே பின்வருமாறு விவரிக்கிறார், “மதத்திற்கும், உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில் அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழிமறித்து கண்மூடித்தனமான செயற்கையில் திருப்புவதையே ஜீவநாடியாய் கொண்டிருக்கின்றது. அதனால் மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லாமலே போய் விடுகின்றது.” பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சமத்துவ சமுதாயத்தை நிறுவிட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் திராவிட மாடல் நாயகன், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் இத்தகைய சதி திட்டத்திற்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அறிவியலுக்கு எதிரான பாஜகவின் மதவாதப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளந்தலைவர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாணவர்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக மாணவர் அணி தெரிவித்துக்கொள்கிறது. படி! நன்றாகப்படி! மறந்துவிட்டவைகளை மீண்டும் படிக்கவும், புதிதாக வளரும் இளைய தலைமுறை பழைய வரலாறுகளை அறிந்து கொண்டு நமது பகை எது என்பதைப் புரிந்து கொள்ளவும். - முத்தமிழறிஞர் கலைஞர் “அண்ணா அறிவாலயம்,” சென்னை-18. நாள்: 12-02-2025
Tweet media one
12
159
277
@arivalayam
DMK
1 day
தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா அபியான் நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். - நாடாளுமன்றத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் #ParliamentBudgetSession2025
Tweet media one
23
184
282
@arivalayam
DMK
1 day
RT @V_Senthilbalaji: நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் அ…
0
276
0
@arivalayam
DMK
2 days
RT @DMKITwing: செவி திறன் குறைபாடு உள்ள குழந்தையின் குரலுக்கு செவி சாய்த்த திராவிட நாயகர்; காலையில் சொன்ன குறையை மாலைக்குள் நிறைவேற்றினார்…
0
295
0
@arivalayam
DMK
2 days
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 11-02- 2025 நிகழ்வுகள் 1. தமிழ்நாட்டிற்கான கல்வி உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல் திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. இன்று (11.02.2025) மக்களவை நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள சமக்ர சிக்‌ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித் தொகைகளுக்கான வருமான உச்சவரம்பை EWS மாணவர்களை போலவே எட்டு லட்சமாக உயர்த்தவதன் மூலம் விளிம்புநிலை சமூக மக்கள் அதிக அளவில் கல்வி பயில இயலும் என்பதால் ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை விவாதிக்க அவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கனிமொழி எம்.பி அவர்கள் முன்மொழிந்தார். 2. மீனவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! திமுக பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி. கடுமையான சாடல். தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியும், அவையில் குரல் எழுப்பியும் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி. அவர்கள் ஒன்றிய அரசால் இனி மீனவர்களை காக்க இயலவில்லை என்றால், இருநாட்டு மீனவர்களும் அவர்கள் பிரச்சினைக்கு அவர்களே தீர்வு காணட்டும் என மக்களவையில் பேசியதன் விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்களின் துயர நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். உண்மையில், கடந்த 2024 ஆம் ஆண்டில், 528க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு, 40 நாட்களுக்குள், 77க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இலங்கை கடற்படையின் மீனவர்களை துன்புறுத்தி, அவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவர்களைக் காவலில் வைத்தது. இலங்கை கடற்படை எங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து மக்களைச் சுட்டுக் கொன்றது. 27 ஆம் தேதி, அவர்கள் இரண்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்றனர். பிப்ரவரி 8 ஆம் தேதி, அவர்கள் 14 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். இன்னும் 216 மீன்பிடி படகுகளும் 97 மீனவர்களும் இலங்கையின் காவலில் உள்ளனர். இந்திய அரசு எதுவும் செய்யவில்லை. அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள இரு மீனவ சமூகங்களும், நவம்பர் 2016 இல் நடந்ததைப் போல, இந்த பிரச்சினையை அவர்களே விவாதித்து முடிக்கு வரும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும். ஒன்றிய அரசால் இப்பிரச்சினை தீர்க்க முடியாவிட்டால் இருநாட்டு மீனவர்களும் தாங்களாகவே அதைத் தீர்த்துக் கொள்ளட்டும். 3. கோயம்புத்தூரில் எய்ம்ஸ்?! திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி தமிழ்நாடு முதலமைச்சர் கோரியபடி, கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்ந்துள்ளதா என மாநிலங்கலவையில் திமுக எம்.பி. பி. வில்சன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆக்ஸ்பாம் இந்தியா 2022இன் படி, 70 சதவீத கிராமப்புற சமூக சுகாதார மையங்கள் (CHC) முழு அளவிலான சிறப்பு மருத்துவர்களை கொண்டிருக்கவில்லை, 83 சதவீதம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாமல் செயல்படுகின்றன, 75 சதவீதம் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமலும் 82 சதவீதம் மருத்துவர்கள் இல்லாமலும் செயல்படுகின்றன. நகர்ப்புற சமூக சுகாதார மையங்களும் சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பதில் 45 சதவீதம் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்கின்றது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ் வெளிநோயாளர் பராமரிப்பு, நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகளுக்கான தொகையை காப்பீட்டில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். 4. ம��த்ரா கடன் முழுமையாக பயன் தருவதை உறுதி செய்க திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் வலியுறுத்தல் முத்ரா கடன் திட்டத்தின் (PMMY) வரம்பை அரசாங்கம் 20 லட்சமாக உயர்த்திய பிறகு தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான மூலதன நிதி எளிதாக கிடைக்கப் பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என திமுக மாநிலங்கலவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் தமிழ்நாட்டில் முத்ரா கடந்திட்டத்தின்கீழ் பயனடைந்த நபர்களின் எண்ணிக்கை, 2022, 2023, 2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்டுகளில் ஷிஷு, கிஷோர், தருண் மற்றும் தருண் பிளஸ் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தொகைகளின் விவரங்கள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் தொழில்முனைவோரை திறம்பட சென்றடைவதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் கடன் பாதுகாப்பை மேம்படுத்த மைக்ரோ யூனிட்களுக்கான கடன் உத்தரவாத நிதி (CGFMU) எவ்வாறு பங்களித்துள்ளது போன்ற விவரங்களை வெளியிடுமாறு கேட்டுள்ளார். ***
Tweet media one
2
108
154
@arivalayam
DMK
2 days
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் 98.25 சதவிகித இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட். - மக்களவை கழகக் குழுத் துணைத் தலைவர் திரு @Dayanidhi_Maran எம்.பி அவர்கள் #ParliamentBudgetSession2025
Tweet media one
8
137
214
@arivalayam
DMK
2 days
தமிழ்நாடு மீனவர்களை தொடர்ந்து இலங்கை அரசு கைது செய்யும் செயலுக்கு ஒன்றிய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். - நாடாளுமன்றத்தில் கழகப் பொருளாளர், மக்களவை குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் #ParliamentBudgetSession2025
7
162
268
@arivalayam
DMK
2 days
ஒன்றிய நிதியமைச்சர் வருமான வரியை குறைத்ததன் மூலம் 1 கோடி பேர் பலனடைவார்கள். மீதமுள்ள 139 கோடி மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன பயன் உள்ளது என்பதை சொல்ல முடியுமா. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல் வருமான வரியை குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. - நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திரு @tiruchisiva எம்.பி அவர்கள் #ParliamentSession
19
335
502
@arivalayam
DMK
2 days
யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகள் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் உள்ளது. ஒன்றிய பாஜக அரசு பல்கலைக்கழகங்களை அபகரிக்க முயற்சிப்பதை ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். - நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திரு @tiruchisiva எம்.பி அவர்கள் #ParliamentSession
2
146
223
@arivalayam
DMK
2 days
மும்மொழி கொள்கை, புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு தரப்பட வேண்டிய கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்! - கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற கழக குழுத் தலைவர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் நோட்டீஸ் #ParliamentSession
Tweet media one
6
147
198
@arivalayam
DMK
3 days
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 10-02-2025 நிகழ்வுகள் 1. நகைக் கடன் பிரிவில் வாராக்கடன் அதிகரிப்பதன் காரணம் என்ன? தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி கேள்வி அண்மையில் ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2024-25ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கக் நகைக் கடன் பிரிவில் வாராக்கடன் 30% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதை குறித்து கேட்டு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) வாரியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கக் கடன்களிலிருந்து எழும் செயல்படாத சொத்துக்களின் (NPAக்கள்) விவரங்கள், மார்ச் 2024இல் 1513 கோடி ரூபாயாக இருந்த வணிக வங்கிகளின் தங்கக் கடன் செயல்படாத சொத்துகள் ஜூன் 2024இல் 62% உயர்ந்து ரூ. 2445 கோடியாகியுள்ளதாக வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மை என்ன? நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன் இலாகாவில் தங்கக் கடன் செயல்படாத சொத்துகளின் சதவீதம் மற்றும் தங்கக் கடன் துறையில் செயல்படாத சொத்துக்களின் அபாயத்தைக் குறைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள், தங்கக் கடன் வழங்கல்களில் சரியான மதிப்பீடு மற்றும் இடர் மதிப்பீட்டை உறுதி செய்யும் அதே வேளையில், சிறு கடன் வாங்குபவர்களுக்கான கடன் அணுகலை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்கிற விவரங்களையும் அதில் அவர் கோரியுள்ளார். 2. வரைவு யுஜிசி விதிமுறைகளின் 2025 ரத்து செய்க சேலம் திமுக எம்.பி. செல்வகணபதி வலியுறுத்தல் பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (யுஜிசி) வெளியிடப்பட்ட வரைவு விதிமுறைகள், 2025இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை விளக்க���மாறு மக்களவையில் சேலம் எம்.பி. செல்வகணபதி கேள்வி எழுப்பியுள்ளார். பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் வரைவு விதிமுறைகள், 2025 இல் உள்ள பல விதிகள் மாநில பல்கலைக்கழகங்களின் கல்வி சுதந்திரம், சுயாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு எதிராக உள்ளது. இந்த விதிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளை முழுமையாக மீறுவதாகவும், மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். பல மாநில சட்டமன்றங்கள் யுஜிசி வரைவு விதிமுறைகளுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள நிலையில் இந்த புதிய வரைவு விதிமுறைகளை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 3. பெண்களுக்கு பணியிட பாதுகாப்பை உறுதி செய்க! தருமபுரி திமுக எம்.பி. அ. மணி வலியுறுத்தல் அன்றாட கூலியாக பணிபுரியும் பெண்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்குமாறு தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அ. மணி நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் அன்றாடம் கூலி பெறும் பெண்களுக்கு ஊதிய ஏற்றத்தாழ்வுகளை தடுக்கவும் பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 4. தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் திட்டங்களை மேம்படுத்துக கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கோரிக்கை தொழிலாளர் காப்பீட்டுக் கழகத் (ESIC) திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் பற்றிய விவரங்கள் கேட்டு கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி மலையரசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி தொகுதி உட்பட நாடு முழுவதும் ESIC திட்டத்தின்கீழ் பயனடையும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை கேட்டுள்ள அவர், அதிகரித்து வரும் பயனாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் ESIC வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tweet media one
5
129
192
@arivalayam
DMK
3 days
இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான தனி ஆணையத்தை அமைக்க வேண்டும். - கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் #Manipur
Tweet media one
13
146
230
@arivalayam
DMK
3 days
RT @mkstalin: ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு! சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்…
0
1K
0
@arivalayam
DMK
3 days
RT @DMKITwing: சிறு நகைக்கடன் அடிப்படையில் வழங்கப்படும் ரொக்கத்தொகையின் உச்சவரம்பு வெறும் 20,000 ரூபாயாக நிர்ணயித்ததை எதிர்த்து நாடாளுமன்ற…
0
202
0
@arivalayam
DMK
3 days
மக்களை பிளவுபடுத்தி அவர்களின் மரணத்தின் மீது ஆட்சி செய்யும் பாஜகவின் பாசிச அரசியலுக்கு மணிப்பூரே சாட்சி. பிரேன் சிங் மட்டுமல்ல அவரை பாதுகாத்து கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்! - கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் #Manipur
Tweet media one
22
142
225
@arivalayam
DMK
3 days
மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்! - கழக நாடாளுமன்றக் குழுத்தலைவர் திருமதி @KanimozhiDMK எம்.பி அவர்கள் அறிக்கை. கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மணிப்பூரில் கும்பல் வன்முறைகளைத் தூண்டிவிட்டு, ஏராளமான மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த பிரேன் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். குறிப்பாக மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள முதலமைச்சர், அதற்கு மாறாக கும்பல் வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கான சாட்சியங்கள் உச்சநீதிமன்ற விசாரணையில் வெளிப்பட்டுள்ளன. சிறுபான்மைப் பிரிவினர் மீது வெறுப்புணர்வோடு பேசிய ஒலிப்பதிவு அம்பலப்பட்டு, அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டுள்ள நிலையில் பிரேன்சிங் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிரேன் சிங் முதல்வராக தொடர எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியினரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் த��்த அழுத்தமும் இந்த பதவிவிலகலுக்கு காரணமாகியிருக்கின்றன. மணிப்பூர் கலவரங்கள் தொடங்கியது முதலே பிரேன் சிங் பதவி விலக வேண்டும், மோடியும் அமித்சாவும் மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. மணிப்பூர் மக்கள் மிகப்பெரிய துயரத்திற்கு ஆளாகி வந்தார்கள். தற்போதும் நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை. மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் 220க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, 60,000 க்கு மேற்பட்ட மக்கள் மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்த அவலம் ஏற்பட்டது. அரசின் நிவராண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானார்கள். அரசின் ஆதரவிலும் பாராமுகத்திலும்தான் இந்த கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. அப்போதும் ஒன்றிய பாஜக அரசும், மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங்கும் வேடிக்கைத்தான் பார்த்தார்கள். மக்களை பிளவுபடுத்தி அவர்களின் மரணத்தின் மீது ஆட்சிசெய்யும் பாஜகவின் பாசிச அரசியலுக்கு மணிப்பூரே சாட்சி. பிரேன் சிங் மட்டுமல்ல அவரை பாதுகாத்து கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்சாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அடுத்து யார் முதல்வராக பதவி ஏற்றாலும் அவர்கள் அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான ஆன தனி ஆணையத்தை அமைக்க வேண்டும். ***
Tweet media one
76
155
299
@arivalayam
DMK
3 days
மக்களை காக்க மன்னவன் அரியணையில் அமர்ந்த நாள்! 🌄 நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் உயிர்நிகர் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்ற நாள் 10.02.1969 இன்று! #KalaignarForever
Tweet media one
61
211
327
@arivalayam
DMK
3 days
தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக திரு.சந்திரகுமார் அவர்கள் பதவியேற்றார்! #DMK4TN
22
339
793
@arivalayam
DMK
3 days
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ. 2 இலட்சம் உதவிநிதி வழங்கினார். #DMK
Tweet media one
Tweet media two
5
145
202
@arivalayam
DMK
3 days
RT @mkstalin: நெல்லை தந்த இனிமையும், ஈரோடு கிழக்கு அளித்த எழுச்சியும் இணைந்து புதுத் தெம்போடு கடலூர் வருகிறேன்... #LetterToBrethren https:…
0
913
0